கரூர் நகராட்சிப் பகுதியில் உள்ள தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி கூறுகையில், “கரோனா பாதிப்புக் காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் மூன்றாவது கட்டமாக நீடித்துவருகிறது.
இதையடுத்து வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் என மத்திய மாநில அரசுகள் வங்கிகள் மூலமாக அல்லது நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
மக்களவை உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர் சந்திப்பு மேலும், மத்திய, மாநில அரசுகள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுவதை விடுத்து தான்தோன்றித்தனமாக செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு நிதி வழங்காமல், வெறும் விளக்கு ஏற்றுங்கள், மெழுகுவர்த்தி ஏற்றுங்கள் எனச் சொல்வதற்கு ஒரு பிரதமர் தேவையில்லை எனவும் கூறினார்.
இதையும் படிங்க...'பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை'