காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து, கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு தேவைப்படும் 82 வகுப்பறைகள் குறித்த பட்டியலை வழங்கினார்.
அதிக வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும், அரசு பள்ளிகளில் குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் (Vending Machine), அவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த எரிக்கும் இயந்திரம் (Incinerator) அமைக்க கேட்டுக்கொண்டார்.