கரூர் மாவட்டம் மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள மண்மங்கலம், தவிட்டுப்பாளையம், செம்படை, சிப்கோ பகுதிகளில் வரவிருக்கும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆய்வுமேற்கொண்டார். இந்தப் பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுதவலர்கள், எம்.பி. ஜோதிமணியிடம் விளக்கமளித்தனர்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, "கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விரைவில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும். முன்னதாக இந்தப் பணிகள் ஐந்து ஆண்டுகளுக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அனைத்துப் பணிகளையும் ஓராண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "இந்தப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்த மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.