கோவை ஒண்டிப்புதுரைச் சேர்ந்த தம்பதியர் வீரமணி-சத்யா (22). இவர்களுக்கு விஜி (1) என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் விஜிக்கு பிறந்தது முதல் பேச்சு வரவில்லை. மருத்துவ பரிசோதனையில் குழந்தை பேசும் திறனை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த சத்யா அக்.10ஆம் தேதி இரவு கரூர் வந்துள்ளார். பின்னர் நொய்யல் ஆற்றில் குழந்தையை வீசி விட்டு தனது கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த சத்யாவை மீட்ட வேலாயுதம்பாளையம் காவல்துறையினர், அவரை கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து நொய்யல் ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடலை, தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.