தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த கரூர் மாணவி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை - மாணவியின் தாயார் சிபிஐக்கு மாற்றும் படி மனு அளித்தார்

கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த கரூர் மாணவி வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிக்கை
பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த கரூர் மாணவி வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிக்கை

By

Published : Dec 7, 2021, 10:40 PM IST

கரூர்:வெண்ணெய்மலைப் பகுதியில், கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், பாலியல் தொல்லைக்கு உயிர் விடும் கடைசிப் பெண் நானாகத் தான் இருக்க வேண்டும் எனக் கடந்த நவ.19ஆம் தேதி கடிதம் எழுதி வைத்துவிட்டு, அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் கடந்த சில வாரங்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை:

மாணவியின் தாயார் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்நிலையில், கடந்த நவம்பர் 24ஆம் தேதி முதல் தற்கொலை விவகாரத்தில், தமிழ்நாடு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தைக் கை விட்டு கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் செய்தியாளர் சந்திப்பு நடத்தி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், இன்று (டிச.07) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாய், இதுவரை குற்றவாளி பற்றிய துப்பு கிடைக்கவில்லை எனவும்; இதையடுத்து மாணவியின் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'சிபிசிஐடி காவல் துறை விரைந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:சட்ட விதிகளின்படி அதிமுக அமைப்பு தேர்தல் - ஓ.பன்னீர்செல்வம்

ABOUT THE AUTHOR

...view details