கரூர் மாவட்டம் கருநெல்லி வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லசிவம் (60). இவரது தாய் ஆட்சியாத்தாள் (78). இருவரும் டி.நல்லிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார், இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.