தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திராகாந்தியைப்போல் மோடி உறுதியுடன் செயல்பட வேண்டும் - ஜோதிமணி - MP Jothimani

கரூர்: இந்தியா-சீனா பிரச்னையை இந்திராகாந்தி போல் பிரதமர் மோடி உறுதியுடன் கையாள வேண்டும் என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி
ஜோதிமணி

By

Published : Jun 18, 2020, 4:35 PM IST

Updated : Jun 18, 2020, 4:57 PM IST

கரூர் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் முன்னிறுத்தி விவாதித்த ஓராண்டு அறிக்கை குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

எம்.பி., ஜோதிமணி பேசிய காணொலி

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் எம்.பி., ஜோதிமணி பேசுகையில், “ இந்திய ராணுவம் உலகிலேயே மிகச்சிறந்த ராணுவங்களில் ஒன்று. சீன பிரச்னையைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி இந்திரா காந்தி போல் உறுதியுடன் இருக்க வேண்டும். இந்திய ராணுவம் வல்லமை மற்றும் தைரியம் பெற்றது.

எனவே இந்திய ராணுவத்திற்கு துணையாக பிரதமரும் அவருடைய அரசும் நிற்க வேண்டும். இந்தக் கடுமையான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கின்றன.

இந்த தேசத்தை முன்னிறுத்தி, கட்சி வேறுபாடுகளை பின்நிறுத்தி நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேசத்தை காப்போம்” என்றார்.

இதையும் படிங்க: வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை தொடங்கிவைக்கும் மோடி

Last Updated : Jun 18, 2020, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details