தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் ஆட்சியரிடம் மநீம வேட்பாளர் மனு - MNM

கரூர்: வாக்கு எண்ணும் மையத்தில் தொழுகை நடத்த சிறப்பு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மநீம கட்சி வேட்பாளர் வாக்கு எண்ணும் அறை குறித்து மனு
மநீம கட்சி வேட்பாளர் வாக்கு எண்ணும் அறை குறித்து மனு

By

Published : Apr 24, 2021, 1:42 PM IST

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் முகம்மது ஹனீப் சஹில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

காற்றோட்டமான வாக்கு எண்ணிக்கை அறை

"ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதனால், நோன்பிருப்பவர்கள் சோர்வாக இருப்பார்கள். எனவே வாக்கு எண்ணிக்கை அறையை காற்றோட்ட வசதியுள்ள அறையாக அமைத்துத் தரவேண்டும்.

மேலும், தொழுகை நடத்துவதற்கு தனி அறை ஒதுக்கித் தரவேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் 14 பெட்டிகளுக்கு பதிலாக 10 பெட்டிகளைத் திறக்கவேண்டும்" என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details