திருச்சியில் பரப்புரையை முடித்துவிட்டு மதியம் 12 மணியளவில் கரூர் மாவட்டம் வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், குளித்தலைச் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாணிக்கத்தை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, குளித்தலைப் பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதி சுங்ககேட் வரை சுமார் இரண்டு கிமீ நடந்து சென்றே மக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். சாலையில் அவரைப் பார்த்த பொதுமக்கள், செல்பி எடுத்தும் கைக்குலுக்கியும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.