கரூர்:கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செய்ய சென்ற ஸ்டாலினுக்கு திருநீறு கொடுக்கும்போது அவற்றைப் பவுடர்போல கீழே போட்டுள்ளார். இதைக் கண்டித்து நேற்று பாஜக சார்பில் முன்னெடுக்கப்பட்ட #gobackstalin ஹேஸ்டேக் டிரெண்டானது.
ஒரு மிகப் பெரிய தலைவரை அவமதித்தது கண்டிக்கத்தக்கது. உண்மையில் அவருக்கு மரியாதை செய்த கட்சி பாஜகதான். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் தேவரின் நற்பண்புகளைப் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்காமல் இருட்டடிப்புச் செய்துள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக எல்லா மதத்தையும் ஒன்றிணைத்துச் செல்லும். ஸ்டாலின், திருமாவளவன் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாக்குக்காக இதுபோன்று இந்து மக்களை அவமதிக்கிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் பெரிய அரசியல்வாதி, அவரின் தலைமைப் பண்புக்காக இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.