கரூர்:திருமாநிலையூரில் இன்று (ஜூலை 2) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 80,943 பயனாளிகளுக்கு ரூ.1,110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி 2 வீர வாள்களை நினைவுப்பரிசாக வழங்கி சிறப்பித்தார். பின்னர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நபார்டு கிராம சாலைகள் மூலம் 12 புதிய சாலைகள், மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளத்துறை, வேளாண்மை, பொறியியல் துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் நிறைவுபெற்ற ரூ.28.60 கோடி மதிப்பீட்டில், 95 திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், மாவட்டத்தில் ரூ.581.44 கோடி மதிப்பீட்டில் 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளின்கீழ் ரூ.500.83 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை சுமார் 80,750 பயனாளிகளுக்கு வழங்கினார்.