தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் திருட்டு: கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்ட சிறுவன்! - கரூர் தற்போதைய செய்தி

கரூர்: நகை திருடியதாக கைதுசெய்யப்பட்ட 14 வயது சிறுவன் சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.

Juvenile Detention Centre
Juvenile Detention Centre

By

Published : Jun 13, 2020, 10:19 AM IST

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சணப்பிரட்டி பகுதியில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்துவருபவர் மணிவண்ணன். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இந்நிலையில், இவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த மூன்று தங்க நகைகளைக் காணவில்லை என பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், கடந்த 9ஆம் தேதி மணிவண்ணனின் மகன் தனது நண்பன் ஒருவனை வீட்டிற்கு அழைத்தாகத் தெரிவித்தார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அந்த 14 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தச் சிறுவன் தான் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டான். இதன் அடிப்படையில் அந்தச் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.

இதையும் படிங்க: திருப்பூரில் எட்டு வயது சிறுவன் கொடூரக் கொலை

ABOUT THE AUTHOR

...view details