தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், ஆண்டான்கோயில் மேற்கு, ஆண்டான்கோயில் புதூர், பள்ளபாளையம், காக்காவாடி போன்ற பகுதிகளில் இரட்டை இலை, சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, வாக்காளர்களிடம் திறந்தவெளி வாகனத்தில் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். ஆனால், திமுகவினர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர். எனவே தேர்தலில் வாக்களித்த பின், ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.