கரூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார்.
அந்த வகையில் இன்று கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள கரூர், தான்தோன்றி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகமலை, கடவூர், க. பரமத்தி ஆகிய எட்டு ஒன்றியங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பான்களை வழங்கினார்.