தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேவிபி வங்கி வழங்கிய கரோனா நிதியை அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சரிடம் வழங்கினார். - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: கேவிபி தனியார் வங்கி, கரோனா நிவராண நிதியாக வழங்கிய ரூ.1 கோடி நிதியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சரிடம் வழங்கினார்.

கேவிபி ஒரு கோடி நிதியை அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சரிடம் வழங்கினார்.
கேவிபி ஒரு கோடி நிதியை அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சரிடம் வழங்கினார்.

By

Published : May 19, 2021, 12:49 PM IST

கரூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் பல கிளைகளுடன் கரூர் வைஸ்யா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் வங்கியின் சார்பில், கரோனா நிவாரண நிதியாக ரூ. 1 கோடிக்கான காசோலையை, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் பாபு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே, கரூர் வைஸ்யா வங்கியின் இயக்குநர்கள் வெங்கடேசன், பிரபுராஜ், ராம்குமார், வங்கி தலைவர் நடராஜன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, மே18ஆம் தேதி சென்னைக்கு விரைந்த தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கினார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details