கரூர்:கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்த கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரான தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "கரூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு இறுதிசெய்யப்பட்டன.
காங்கிரஸ் கொடுத்த பட்டியல், நாங்கள் கொடுத்த பட்டியல் என ஆலோசித்து இன்னும் போட்டியிடும் இடங்கள் இறுதிசெய்யப்படவில்லை. மூன்று நாள்களாக காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் இடங்கள் குறித்துப் பேசப்பட்டன. அவர்கள் தரப்பில் பொது வார்டுகளை கேட்கிறார்கள். சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன.
திமுகவின் வாக்கு வங்கி தொகுதிகளைக் கேட்ட ஜோதிமணி
திமுக கட்சியில் பொறுப்பில் உள்ள நகரச் செயலாளர்கள் பேரூராட்சி நிர்வாகிகள் போட்டியிடுவதற்குத் தயாராக உள்ள வார்டுகளை ஜோதிமணி எம்பி காங்கிரஸ் கட்சி போட்டியிடப் பட்டியலை வழங்கினார். திமுக தலைமையிடம் இது குறித்துப் பேசி இருக்கிறோம். திமுக தலைமையும் காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர்” எனக் கூறினார்.