கரூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 2ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகிறார். இதற்காக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கரூருக்கு வருகிறார். இதனால் விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அன்றைய நாள் மாவட்டம் முழுவதும் உள்ள 76,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதோடு முடிவுற்ற வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கியும், புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டியும் முதலைமைச்சர் வைக்க உள்ளார். கடலில் காற்றாலை கட்டமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது. இதற்கான செலவுகள், நன்மைகள், தீமைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இதற்காக வெளிநாடு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்" என்றார்.