தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய வட்டாட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டுவிழா - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்பு! - கரூர் புதிய தாலூகா கட்டடம்

கரூர்: புஞ்சைபுகழூர் பகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

minister mr vijayabhaskar
minister mr vijayabhaskar

By

Published : Jun 14, 2020, 11:43 PM IST

கரூரில் கடந்த ஆண்டு மண்மங்கலம் வட்டத்தில் இருந்து வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு, புஞ்சைபுகழூர் பகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று ( ஜூன் 14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரூ. 3 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள, கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நட்டு, விழாவைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் இயக்குநர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


இதையும் படிங்க:கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்தாகுமா? - உயர் கல்வித்துறை அமைச்சர் பதில்!

ABOUT THE AUTHOR

...view details