தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சை பின் போக்குவரத்துறை அமைச்சர் குலதெய்வக் கோயிலில் வழிபாடு! - கரோனாவிலிருந்து மீண்ட அமைச்சர்

கரூர்: கரோனாவிலிருந்து குணமடைந்த பின்னர் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குலதெய்வக் கோயிலில் குடும்பத்தினருடன் வழிபாடு செய்துள்ளார்.

Minister MR Vijayabaskar
போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்

By

Published : Sep 4, 2020, 10:28 AM IST

கரோனா வைரஸ் சிகிச்சை பின் கரூர் திரும்பிய தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்தார். தனது குடும்பத்தினருடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து, கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தான் மீண்டு வருவதற்காகப் பிரார்த்தனை செய்த கட்சித் தொண்டர்கள், பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், மீண்டும் மக்கள் பணியில் தன்னை வழக்கம்போல் ஈடுபடுத்திக் கொள்வதாகவும் கூறினார். கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்றால் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் பாதிக்கப்பட்டிருப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நோய்த் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்த அவர் தனது பணிகளை மேற்கொண்டார். கடந்த ஒன்றாம் தேதி சென்னை பல்லவன் போக்குவரத்து பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்பு பேட்டியளித்தார். இதைத்தொடர்ந்து, தற்போது சொந்த ஊர் திரும்பி குலதெய்வக் கோயில் வழிபாடு செய்துள்ளார்.

இதையும் படிங்க: '8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது' - திமுக எம்பி வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details