தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ உபகரணங்கள் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர்: அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் ரூபாய் 7 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்கள் கட்டடத்தை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மக்கள் நலனுக்காக திறந்துவைத்தார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்

By

Published : Jun 19, 2020, 4:34 PM IST

கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் அதி நவீன வசதியுடன் கூடிய மருத்துவ உபகரணங்கள் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இதில், ரூபாய் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன், ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் உணவுப்பாதை உபாதை கண்டறியும் கருவி, ரூபாய் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான அறுவை அரங்கம் என மொத்தம் ரூபாய் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்கள் இக்கட்டடத்தில் உள்ளன.

இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். மேலும் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கரூர் மாவட்டத்தை தவிர கூடுதலாக நாமக்கல், திண்டுக்கல் போன்ற பிற மாவட்டங்களிலிருந்து கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 494 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 464 நபர்கள் பூரணமாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இன்னும் மருத்துவமனையில் 30 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதி நவீன வசதியுடன் கூடிய எம்ஆர்வி ஸ்கேன் பொதுமக்கள் நலனுக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று ( ஜூன் 19) மட்டும் ரூபாய் 7 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனைக்கு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அதிநவீன கருவிகள் வழங்கப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details