தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2,000 பெண்கள் தாலிக்குத் தங்கம் வழங்கிய எம்.ஆர். விஜயபாஸ்கர்! - பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி

கரூர்: திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2,000 பெண்களுக்கு  தாலிக்குத்  தங்கத்தைப்  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

minister

By

Published : Oct 25, 2019, 11:28 PM IST

கரூர் மாவட்டத்தில் சமூக நல, சட்டத்துறையின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி, தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி அட்லஸ் கலையரங்கம் பகுதியில் நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் பெண்களுக்கு 12.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்கள் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்பெற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

2,000 பெண்கள் தாலிக்குத் தங்கம்

இதில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, சமூக நல அலுவலர் ரவி பாலா எனப் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'மருத்துவர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும்!'

ABOUT THE AUTHOR

...view details