தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக விலகலைக் கடைப்பிடிக்க எம்.ஆர். விஜயபாஸ்கர் வேண்டுகோள்! - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வேண்டுகோள்

கரூர்: அரசின் 144 தடை உத்தரவை அனைவரும் பின்பற்றி சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Minister MR. The request of Vijayabaskar
Minister MR. The request of Vijayabaskar

By

Published : Apr 6, 2020, 12:24 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவர்கள் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார் .

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அரசு அறிவுத்துள்ள 144 தடை உத்தரவை மதித்து பொதுமக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

நாமக்கல், திண்டுக்கல் மாவட்ட மருத்துவமனைகளில் இருந்த கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24மணி நேரக் கட்டுப்பாட்டு அறை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் இதுவரை 560 புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: 'துப்புரவு பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள்'- அமைச்சர் கே.பி. அன்பழகன்

ABOUT THE AUTHOR

...view details