கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கலந்துகொண்டு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கரூர் வட்டத்திற்குள்பட்ட தாந்தோணி கிராமம், சணப்பிரட்டி கிராமம், திருமாநிலையூர் கிராமம், கரூர் நகராட்சி பகுதி, மண்மங்கலம் வட்டத்திற்குள்பட்ட ஆண்டாள் கோயில் கிழக்கு, மேற்கு, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 404 முதியோர்களுக்கு உதவித் தொகையை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.