கரூர் நகராட்சியின் முன்னாள் உறுப்பினர் வைரப்பெருமாள் நினைவாக ஐம்பதாவது ஆண்டு புறா பந்தயப் போட்டி நடைபெற்றது. திருவள்ளூர் மைதானத்தில் கடந்த ஜூலை 19ஆம் தேதி சாதா புறாக்களுக்கான போட்டி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. மேலும், ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் கர்ண புறாக்களுக்கான பந்தயப் போட்டி நடைபெற்று வந்தது.
புறா பந்தயப் போட்டி பரிசளிப்பு விழா; அமைச்சர் பங்கேற்பு - pigeon race in karur
கரூர்: புறா பந்தயப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகையை போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
அதன் நிறைவு நாளான நேற்று வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார். சாதா புறக்களுக்கான போட்டியில் முதல் பரிசு 10,000 ரூபாயை கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், இரண்டாம் பரிசு 7,000 ரூபாய் சங்கர் என்பவருக்கும், மூன்றாம் பரிசு ஜெகன் என்பவருக்கும் வழங்கப்பட்டது.
கர்ண புறா பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற கரூரைச் சேர்ந்த மோகனுக்கு பரிசுத்தொகை ரூபாய் 25,000 வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், புறா வளர்ப்போர், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.