தேசிய அளவிலான குத்துச்சண்டைப் பயிற்சி, உத்தரப் பிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் பாக்ஸிங் கிளப் சார்பில், வித்யா ஸ்ரீ, சஸ்மிதா, சௌந்தர்யா, த லினேஷ், பைஷாலமின், கொளதம், சிரிதர், களிதாஸ், ரஞ்சித், ராஜகுமாரன் உள்ளிட்ட நபர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர்.
குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து! - Sports News
கரூர் : குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.
கரூர்
இந்நிலையில், இந்த மாணவர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களையும், கோப்புகளையும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை நேரில் சந்தித்துப் பெற்றுக் கொண்டனர். அப்போது அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.