தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினார்கள்.
மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்! - மின்வாரிய ஊழியர்கள்
கரூர்: மின்சார துறையின் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Karur tneb employees
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த சங்கத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர வேலையளிக்க வேண்டும், தினக்கூலி 380 ரூபாயாக உயர்த்த வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கேங்மேன் எனப்படும் நிரந்தர பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.