கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா மே 5ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் பல்வேறு வகையான சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று விநோதமாக 2,000 கிலோ ஐஸ் கட்டிகளைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
குளித்தலை மாரியம்மனுக்கு ஐஸ் வைத்த பக்தர்கள்! - குளித்தலை மாரியம்மன் கோவில் ஐஸ் கட்டி அலங்காரம்
கரூர்: குளித்தலை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ ஐஸ் கட்டி அலங்காரம் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

temple
அதன் பின் நடைபெற்ற சிறப்பு பூஜையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்பு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் பகல் முழுவதும் வெயில் கொளுத்துவதால், அம்மனுக்கு ஐஸ் கட்டியால் அலங்காரம் செய்தால் வெப்பம் தணியும் என்பது ஐதிகம் என்று கூறுகின்றனர்.