தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர்: பிரபல வணிக வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! - man died suspious in karur shopping complex

கரூர் பேருந்து நிலையம் அருகே பிரபல வணிக வளாகத்தில் உயிரிழந்த நிலையில், ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man-died-suspious-in-karur-shopping-complex
கரூர்: பிரபல வணிக வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

By

Published : Jun 27, 2021, 10:59 PM IST

கரூர்:கரூர் தாந்தோன்றிமலை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (52). கடந்த ஜூன் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டிலிருந்து மகளின் திருமண ஏற்பாட்டுக்காக பணம் தயார் செய்வதற்கு வெளியே சென்றவர், இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அருள்ராஜ் குடும்பத்தினர் இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், கரூரில் உள்ள பிரபல வணிக வளாக லிப்ட்டுக்குள் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், காணாமல் போன அருள்ராஜ் என்பதை கரூர் நகர காவலர்கள் கண்டறிந்தனர்.

முதல்கட்ட விசாரணையில், வணிக வளாகத்தில் மூன்றாவது தளத்தில் உள்ள ரமேஷ் என்பவரை சந்தித்து திரும்பிய போது, தவறுதலாக லிப்ட்டில் தவறி அருள்ராஜ் விழுந்தது அங்குள்ள சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்தனர்.

ஊரடங்கு காரணமாக வணிக வளாக லிப்ட் பராமரிப்பின்றி இயக்கபட்டதே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மாணவியை கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

ABOUT THE AUTHOR

...view details