தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

கரூர்: தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொள்ளையன் சிறையில் அடைப்பு
கொள்ளையன் சிறையில் அடைப்பு

By

Published : Jul 11, 2020, 8:06 PM IST

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகே அருணாச்சல நகர் பகுதி மூன்றாவது தெருவில் வசிப்பவர் வெற்றிவேல். இவர், இந்து முன்னணி கட்சியின் மாவட்ட நகர அணி செயலாளராக இருந்துவருகிறார்.

நேற்று(ஜூலை 10) இவரவது வாட்ஸ் ஆப்க்கு இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபர் குறித்து காணொலி ஒன்று வந்துள்ளது. ஏற்கனவே வெற்றிவேல் இருசக்கர வாகனம் திருட்டு போய் இருந்தது.

எனவே தனது பகுதியில் தொடர்ந்து வாகன திருட்டு நடைபெறுவதால் அந்த சிசிடிவி பதிவை கொண்டு சென்று பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பதிவாகியிருந்த சிசிடிவி பதிவை வைத்து கொள்ளையனை கைது செய்தனர்.

விசாரணையில் கைதான நபர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஷேக் பாஷா (40) என்பது தெரியவந்தது. பின்னர், அவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் திருடு போன வெற்றிவேல் வாகனம், சிசிடிவியில் பதிவான வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, வாகனம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details