கரூர் மாவட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 13 ஆட்சித்தலைவர்கள் பணி செய்துள்ளனர். தற்பொழுது, கரூர் மாவட்டத்தின் பதினான்காவது மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி கடந்த சில நாள்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (அக். 30) கரூர் மாவட்ட ஆட்சியராக மலர்விழி பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கார்த்திகா, தருமபுரி மாவட்ட ஆட்சியராகப் பணியிடமாறுதல் செய்யப்பட்டார்.