தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழ்நாட்டை அதிமுக உருவாக்கியது - தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழ்நாட்டை அதிமுக உருவாக்கியது

கரூர்: நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தி தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக உருவாக்கியது அதிமுக அரசு என அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையின்போது பேசினார்.

எம். ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை
எம். ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை

By

Published : Mar 22, 2021, 12:25 PM IST

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் (மார்ச். 21) ஆண்டான்கோயில் மேல்பாகம் ஊராட்சி, அமிர்தாம்பாள் நகர், மருத்துவர் நகர், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "மு.க. ஸ்டாலின் கேஸ் விலை, டீசல் விலை உயர்ந்ததாக போராட்டம் நடத்தினார். ஆனால் முதலமைச்சர் தற்பொழுது உங்களுக்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

எம். ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை
பேருந்தில் பயணிக்க பெண்களுக்கு 50 விழுக்காடு கட்டண சலுகை, முதியோர்கள் அனைவருக்கும் ரூ. 2,000 ஓய்வூதியம், பெண்களுக்கு வாஷிங் மெஷின் இலவசம் என தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கைகள் எப்பொழுதும் ஒன்றுமில்லாததாகத்தான் இருக்கும். இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்தனர். ஆனால் நிலம் கொடுத்து விட்டார்களா?
அதிமுக அரசு நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக உருவாக்கியுள்ளது. உணவு உற்பத்தியில் முதல் இடமாக உள்ள தமிழ்நாடு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசின் விருதை பெற்றுவருகிறது. எனவே நீங்கள் சிந்தித்து மீண்டும் அதிமுக அரசு அமைவதற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details