கரூர் மக்களவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தளவாய்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று பார்வையிட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கரூர் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பில்லை - ஜோதிமணி குற்றச்சாட்டு - election box room
கரூர்: வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், தேர்தல் அலுவலர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி
வழக்கமாக வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு அந்த விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு, குறைந்தளவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக துப்பாக்கி ஏந்திய 10 காவல்துறையினர் கூட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. மேலும் தேர்தல் அலுவலர்களும் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.