கரூர் காமராஜபுரம் சாலையை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன் (22 ). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரனின் நடவடிக்கை சரியில்லாததால் காதலித்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக பேசுவதை நிறுத்திக்கொண்டுள்ளார்.
இதையடுத்து ஹரிஹரன் அந்த பெண்ணிடம் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது. இன்று ஹரிஹரனை காவல் நிலையத்தில் பிடித்து கொடுப்பதற்காக கரூர், ஈஸ்வரன் கோயில் அருகே அப்பெண் வர சொல்லியுள்ளனர். அப்போது ஹரிஹரனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.