கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்தது. பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சூரிய கூடார உலர்த்தி, பெண் விவசாயி காளியம்மாள் தோற்றத்தில் 900 சதுர பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார தேங்காய்பருப்பு உலர்த்தி ஆகியவற்றை மதிப்பீட்டுக் குழு பார்வையிட்டது.
சாதாரணமாக சூரிய வெப்பத்தில் உலர வைக்க ஏற்படும் காலமும், கூலியாட்கள் செலவு வெகுவாக குறையும் என்பதைக் கருத்தில் கொண்டு 60 சதவிகித மானியம் வழங்கி இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகத் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தோப்பு வெங்கடாசலம் , ''டெங்கு கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக சேக்பிட் என்ற கழிவுநீர் உறிஞ்சிக் குழி திட்டம் தமிழ்நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. விவசாயம் அழிவை நோக்கிச் செல்லாமல் பாதுகாக்கும் வகையிலும், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் அமைந்துள்ளது'' என்றார்.
சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு இந்த ஆய்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.ராஜேந்திரன், கருணாநிதி, நடராஜன், எம்.கே. மோகன், அண்ணா தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:அதிமுக கூட்டணியில் இரண்டாவது மிகப் பெரிய கட்சி பாமக -ஜி.கே. மணி