கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் பயணிப்போரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து அனுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா வைரஸ் குறித்த விழப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடைகளுக்கு வருவோர்களிடம் சமூக இடைவெளி குறித்து எடுத்துரைத்துவருவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிந்த 144 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதுவரை 35 பேர் கைதுசெய்யப்பட்டு, 20 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.