கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த வடக்கு மயிலாடியைச் சேர்ந்த ரத்தினம் மகன் தங்கராஜ்(25). இவர் வாழைக்காய் வெட்டும் கூலித் தொழிலாளி. இவர் இரவு மணப்பாறை சாலையில் குளித்தலையில் இருந்து வடக்கு மயிலாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதே வழியில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலி - உடற்கூறு ஆய்வு
கரூர்: குளித்தலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
குளித்தலை காவல்நிலையம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குளித்தலை காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.