கரூர்: குளித்தலை தெற்கு மடவாளர் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சீனிவாசன். குளித்தலை உழவர் சந்தை முதல் மணப்பாறை ரயில்வே கேட் வரை செல்லும் அண்ணா நகர் புறவழிச் சாலையின் நடுவில் இவருக்கு சொந்தமாக 236 அடி நீளம் 36 அடி அகலம் கொண்ட இடம் உள்ளது. எந்த ஒரு முன் அறிவிப்பின்றியும் தனக்குச் சொந்தமான இடத்தில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்துவிட்டதாக பல வருடங்களுக்கு முன்பு இவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணையின் போது சீனிவாசனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் அவரது நிலம் அவருக்கு ஒப்படைக்கப்படவில்லை. இது குறித்து நீதிமன்றத்தில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு சொந்தமான இடத்தை 2006ஆம் ஆண்டு சுவாதீனம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனக்கு சொந்தமான இடத்தை வேலி போட்டு அடைத்து விட்டார்.
சிக்கலான சாலை
இதனால் இச்சாலையில் யாரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்திற்கு பயனுள்ள வழித்தடமாக இருந்த இந்த சாலை அடைக்கப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் சிரமத்திற்குள்ளானார்கள்.
அடைக்கப்பட்ட பகுதிக்கு உரிய மதிப்பீடு செய்து அதற்கான தொகையை அந்த இடத்தின் உரிமையாளருக்கு வழங்கி, பாதையைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் சாலையைத் திறக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாலை திறப்பு