தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் சென்றும், காலில் விழுந்து ஆசி வாங்கியும் அதிமுக வேட்பாளர்  வாக்கு சேகரிப்பு! - ADMK candidate Muthukumar

கரூர்: கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துக்குமார், இருசக்கர வாகனத்தில் சென்றும், பொது மக்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றும் வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதி  கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்  அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் இருசக்கர வாகன பரப்புரை  கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் முத்துக்குமார்  Krishnarayapuram assembly constituency  2021 ADMK candidate for Krishnarayapuram  கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர்  ADMK candidate Muthukumar  Krishnarayapuram constituency ADMK candidate Muthukumar's two-wheeler campaign
Krishnarayapuram constituency ADMK candidate Muthukumar's two-wheeler campaign

By

Published : Mar 24, 2021, 8:30 AM IST

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தானேஸ் (எ) முத்துக்குமார், பாகநத்தம், காக்காவாடி கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள அம்மையப்ப கவுண்டன்புதூர், வெட்டிக்காரன்பட்டி, ஊத்துக்குழி சின்னகுளத்துப்பட்டி, ஒத்தையூர் ஆகிய பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் மக்களோடு மக்களாக சாலையில் பயணித்தும், வழியில் செல்லும் வாக்காளர்களை சந்தித்தும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களின்கால்களில் விழுந்தும் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடையே அவர் பேசுகையில், ”பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது. அதிக அளவு மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பி உள்ளனர். எனவே இந்தத் திட்டத்தை 150 நாள்களாக அதிமுக அரசு உயர்த்தி வழங்கும் எனத் தேர்தல் வாக்குறுதி வழங்கியுள்ளோம். தொகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவதற்கு நீங்கள் என்னை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யுங்கள்.

காலில் விழுந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

மீண்டும் அதிமுக அரசு அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரின் இருசக்கர வாகன பரப்புரையும் காலில் விழுந்து ஆசிகேட்டு வாக்கு சேகரிக்கும் பரப்புரையும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:'சொந்த தொகுதியையே ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி' - ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details