கரூர் மாவட்டம் வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 42 வயதான இவர், லாரி கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதன்மூலம் கரூர், கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பகுதியிலுள்ள கார் வாங்கி விற்கும் தொழில் செய்பவர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் போட்டியின் காரணமாக திருப்பூரைச் சேர்ந்த சின்னசாமியுடன் ஏற்கனவே இவருக்கு பிரச்னையும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு சின்னச்சாமி அவரது நண்பர்கள் நான்கு பேர்களுடன் வெண்ணைமலை பூர்ணிமா கார்டனிலுள்ள விக்னேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு தொழில் சம்பந்தமாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது வாய்த்தகராறு முற்றி கைகலப்பு உருவாகியுள்ளது.