உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சித்த மருத்துவத்தில் உள்ள கபசுரக் குடிநீர் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக் கூடிய சித்த மருந்துகளை தற்போது மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் முயற்சியால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக்கூடிய கபசுரக் குடிநீர் சூரணம் பொடி 50 கிராம், ஆடாதொடை மணப்பாகு நூறு மில்லி, தாளிசாதி சூரண மாத்திரை 50, அமுக்கரா சூரண மாத்திரை 50, என இந்த சித்த மருந்துகள் அடங்கிய மருந்து பெட்டகத்தை மலிவு விலையில் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
கரூரில் அரசு சார்பில் மலிவு விலையில் சித்த மருந்து தொகுப்பு வழங்கல்! - கரூர் சித்த மருந்து வழங்கல்
கரூர்: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மலிவு விலையில் சித்த மருந்து பெட்டக விற்பனையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மலிவு விலையில் சித்த மருந்து பெட்டக விற்பனை தொடக்க விழா கரூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் நகர்ப்புறம், கிராமப்புறங்களில் இதுவரை ஐந்து டன் அளவிற்கு கபசுரக் குடிநீர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் காய்ச்சி வடிகட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 50 கிராம் பாக்கெட்டுகளில் கபசுரக் குடிநீர் பொடியும் வழங்கப்பட்டது. ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் மாத்திரை 1 லட்சம் நபர்களுக்கு கரூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்ற மாவட்டங்களைவிட கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:'அரசுகளை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் கனவு பலிக்காது' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!