கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பகுதிக்கு உள்பட்ட பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் மோனிக் (17). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக விண்ணப்பம் வாங்கி வருவதாக தாய் தந்தையிடம் கூறி விட்டு சென்ற மகன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அண்ணாதுரை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.