மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் அதிமுக வடக்கு நகர அதிமுக சார்பில் பெண்களுக்கான இரண்டு நாள் கபடிப் போட்டி நேற்று தொடங்கியது.
இதில், பங்கேற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பல பெண்கள், கபடி அணிகள் வந்திருந்தன. இந்த கபடிப் போட்டியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான அரையிறுதி இறுதிப் போட்டிகளில் தமிழ்நாடு அணி, ஒட்டன்சத்திரம் அணிகள் மோதின. இதில் ஒட்டன்சத்திரம் அணி 32 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தது.
மாநில அளவிலான பெண்கள் கபடிப் போட்டி இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் அணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் பரிசுத் தொகையாக 72 ஆயிரத்து 72 ரூபாய் வழங்கினார். மேலும் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பரிசுப் பொருள்கள், ரொக்கப் பணம் ஆகியவை வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகம்: பட்டியலினத்தவர்களைச் சரமாரியாகத் தாக்கிய கும்பல்