கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் இன்று (செப்டம்பர் 8) ஓய்வுபெற்ற காவலர்களுக்கான நல கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கலந்துகொண்டு ஓய்வுபெற்ற காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.
கரூரில் காவலர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய எஸ்பி! - karur sp girts
கரூர்: ஓய்வு பெற்ற காவலர்களின் நல கூட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிசுகளை வழங்கினார்.

ps
மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவலர்களின் குழந்தைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.