தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வர்த்தக சங்கத் தலைவர்களுடன் கரூர் எஸ்பி கலந்துரையாடல் - கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கரூர்: மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக சங்கத் தலைவர்களுடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

By

Published : Jun 30, 2020, 9:33 PM IST

கரூர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தனியார் கூட்டரங்கில், கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக சங்கத் தலைவர்கள், பொறுப்பாளர்களை அழைத்து கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கலந்துரையாடல் நடத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் ஜவுளி ஏற்றுமதி&இறக்குமதி, ரெடிமேட், மளிகைப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் உள்பட அனைத்து வர்த்தக சங்கத் தலைவர்களும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக வர்த்தக சங்கத் தலைவர்கள், அவரவர் வியாபாரிகளுக்கு அரசின் உத்தரவுப்படி முகக்கவசம், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், குறிப்பாக மாவட்டத்தில் மதியம் 2 மணிக்கு மேல் கடைகள் அடைக்க அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வர்த்தக சங்கத்தினர் இ-பாஸ் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தனர். அதற்கு அவர் இதுதொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details