கரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி இன்று தனது இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையை மண்மங்கலம், ஆத்தூர், தான்தோன்றிமலை, ராயனூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “கரூர் மாவட்டத்தில் திமுக போட்டியிடும் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சிகள், திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தேர்தல் பரப்புரைக்கு மட்டும் இறுதி நாள் அல்ல, அதிமுக அரசுக்கும் இறுதிநாள். அடிமை எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் இறுதிநாள்.