தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம் - கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்
உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்

By

Published : Oct 9, 2021, 5:03 PM IST

கரூர்:மாவட்டத்தில் 15 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 8ஆவது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சைகள் உள்பட 16 பேர் களத்தில் உள்ளனர்.

இதேபோல க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 8ஆவது வார்டு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை உள்பட 8 பேர் களத்தில் உள்ளனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்

வாக்குப்பதிவு தீவிரம்

இதுதவிர கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் சித்தலவாய் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. மேலும் 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 78 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி 39.15 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

அதிக அளவில் பெண்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், வெள்ளியணை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். 78 வாக்குச்சாவடி மையங்களில் 19 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:குழிக்குள் விழுந்த யானை- 3 மணி நேரம் போராட்டம்..!

ABOUT THE AUTHOR

...view details