தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குணமடைந்தவர்கள் பட்டியல்: கரூர் மருவத்துவமனை முதலிடம்! - கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

கரூர்: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள பெருமையை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

By

Published : Apr 20, 2020, 12:13 PM IST

Updated : Apr 20, 2020, 12:28 PM IST

கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களில் தற்போது வைரஸ் பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்துள்ள 48 நபர்களை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவரவர் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.

வைரஸ் தொற்றிலிருந்து முழுவதும் நலம்பெற்று வீடு திரும்பியவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைகளை தட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், செவிலிகள் வழியனுப்பி வைத்தனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 53 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என மொத்தம் 48 பேர் இன்று நலம்பெற்று வீடு திரும்பினர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இதுவரை மொத்தமாக 101 நபர்கள் கரோனா வைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழ்நாடு அளவில் அதிக பேர் நலம் பெற்று திரும்பியுள்ள பெருமையை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது.

இதுகுறித்து நலம் பெற்று வீடு திரும்பிய நபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி நாங்கள் குணமடைய கடுமையாக உழைத்தோம். சுகாதாரமான உணவுகளை உரிய நேரத்தில் வழங்கி அவர்கள் எங்களை நன்கு பார்த்துக்கொண்டனர்” என்றார்.

இதையும் பார்க்க:ஏறுமுகத்தில் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை!

Last Updated : Apr 20, 2020, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details