தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் துணை மின் நிலையத்தில் கட்டுக்கடங்காத தீ - போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்! - கரூரில் துணை மின் நிலையத்தில் தீ

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

fire accident
fire accident

By

Published : Dec 3, 2019, 6:02 PM IST

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மின்சாரம் வழங்கக் கூடிய, துணை மின் நிலையம் அதன் எதிர்புறம் செயல்பட்டு வருகிறது. இந்தத் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, ஒரு டிரான்ஸ்ஃபார்மர் தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வாகனங்களில் வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

கரூர் துணை மின் நிலையத்தில் தீ

இந்தத் தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் பார்வையிட்டார். தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையும் படிங்க: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details