கரூர்: தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் (TRB) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த நவ.2019 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.அதற்கான தேர்வு கணினி மூலம் இணையதள தேர்வு எழுதியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் அடிப்படையில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தேர்வு அறிவிப்பு
கடந்த நவ.9 ஆம் தேதி மீண்டும் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு டிச.8 முதல் டிச.12 வரை ஐந்து நாட்கள் மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெற்றது. இறுதி நாளான நேற்று டிச.12 ஆம் தேதி, கரூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் சுமார் 3,791 தேர்வாளர்களுக்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளில் கணினியில் இணைய வழி தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தேர்வு மையங்கள் ஏற்பாடு
இத்தேர்வில் கரூர் மாவட்ட தேர்வாளர்கள் மட்டுமின்றி திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வாளர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள என்.எஸ்.என் பொறியியல் கல்லூரி, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள விஎஸ்பி பொறியியல் கல்லூரி மற்றும் சேரன் பொறியியல் கல்லூரி என நான்கு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தேர்வாளர்கள் அவதி
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி தேர்வு மையத்திற்கு புதுக்கோட்டையில் உள்ள விக்னேஷ்வரி என்ற பெண்ணிற்குத் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காகத் காலை 4 மணிக்குப் புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்ட தேர்வாளர் விக்னேஷ்வரி, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி தேர்வு மையத்திற்கு வர ஐந்து நிமிடம் காலதாமம் ஆனதாகக் கூறப்படுகிறது.