கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல் துறை சார்பில் கோடைகாலம் தொடங்குவதை அடுத்து மக்களின் தாகத்தை தணிக்கும் வண்ணம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
தண்ணீர் பந்தலினை குளித்தலை உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா திறந்து வைத்தார். பின்னர் காவலர்கள், பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினர்.